பிஎல்சியானது, நாடு பூராகவும் ”வழங்கப்படும் முதலிடம், நாட்டின் அனைத்து இடங்களிற்கும்’’ என்ற தொனிப்பொருளில் ஒருநாள் விளம்பர பிரச்சாரத்தை மேற்கொண்டது.


இலங்கையின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சி, ”வழங்கப்படும் முதலிடம், நாட்டின் அனைத்து இடங்களிற்கும்’’ என்ற உணர்ச்சிப்பூர்வமிக்க தொனிப்பொருளின் கீழ், நாடு தழுவிய கிளை வலையமைப்பு மூலம் ஒருங்கிணைந்த விற்பனை விளம்பர பிரச்சாரத்தை நடத்தியது.

பீப்பள்ஸ் லீசிங்கின் தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் திரு. சப்ரி இப்ராஹிம், முதுநிலை  நிர்வாகம் மற்றும் அனைத்து 200 கிளைகளிலிருந்தும் 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த  ஞாபகார்த்த  ஒரு நாள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதில் பிஎல்சி உடையணிந்த ஊழியர்கள் விற்பனையில் அதிகரிப்பை  உருவாக்க அணி திரண்டனர். ஒவ்வொரு கிளையில் இருந்தும் 10 உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவினரும் விற்பனை விளம்பர அதிகாரியால் வழிநடத்தப்பட்டார்கள் . பிஎல்சியின் புதுமையான நிதி தயாரிப்புகள் மற்றும் தனித்துவமான நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த குழுவினர் அந்தந்த இடங்களில் பிரச்சாரம் செய்தார்கள்.

பிரச்சாரத்தின் முதன்மை கவனமானது, பிஎல்சியின் புதிய நிதி தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொண்டு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்குடன் இருந்தது. பிரச்சாரக் குழுக்கள் ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று அவர்களின் வீட்டு வாசல்களில் நிதி சூழ்நிலையின் அடிப்படையில் தீர்வுகளை வழங்கின.

ஒருங்கிணைந்த பிரச்சாரமானது,  நான்கு முக்கிய பகுதிகளை வலியுறுத்தியது: வாகன குத்தகை, வாகன கடன்கள், முச்சக்கர வண்டி குத்தகை மற்றும் வணிக கடன்கள் ஆகும்.

வாகன குத்தகை / கடன்களின் கீழ் ஒரு முக்கிய தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் சலுகைகளாவன; குத்தகை மூலதனத்தை தவணை அடிப்படைகளில் செலுத்தும் வசதி – பிஎல்சியே இச்சலுகையினை வழங்கும் முதல் நிறுவனமாகும்.  கவர்ச்சிகரமான வசதியான, தனிப்பயனாக்கப்பட்ட கடன் தவணைத் திட்டங்கள் மற்றும் 7 வருட காலத்திற்குள் பணம் செலுத்துவதற்கான வசதிகள் ஆகியவை அடங்கும். ஒரு வருடத்திற்குள், ரூ. 100,000/-  எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ்,  25 மாதாந்த வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

பிரபலமான மற்றும் புத்தாக்க  முச்சக்கர வண்டி குத்தகை பிரிவானது , மூன்று மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட நிதியை வெளியிடுவதற்கான வசதிகள், முதல் வருடத்திற்கான இலவச காப்புறுதி, மூன்று இலவச டயர்கள் மற்றும் ரூ. 8000/- இலவச வாகன சேவையினையும் உள்ளடக்கி வழங்கப்படுகின்றது.

நெகிழ்வான வணிக கடன் அம்சங்களில் குறுகிய மற்றும் நீண்ட கால கடன்கள், குத்தகை தொகையை தவணைகளில் செலுத்துதல், வணிகத்தின் தன்மையைப் பொறுத்து பொருத்தமான திருப்பிச் செலுத்தும் திறன், நிலையான சொத்துக்கள் மற்றும் வாகனங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான திறன் மற்றும் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பின் அடிப்படையில் கடன் தொகையை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்

பல புதிய வாடிக்கையாளர்கள் அந்த இடத்திலேயே சேர்க்கப்பட்டதால் பிரச்சாரத்தின் வெற்றி உடனடியாக அளவிடப்படுகிறது.

பீப்பள்ஸ் லீசிங்கின் தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளர் திரு. சப்ரி இப்ராஹிம், வழங்கப்படும் முதலிடம், நாட்டின் அனைத்து இடங்களிற்கும் ‘ ஒரு வெற்றிகரமான விளம்பர பிரச்சாரமாகும், இது பிஎல்சியின் புதுமையான தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தி, சாத்தியமான மற்றும் வழமையான வாடிக்கையாளர்கள் இருவரையும் மையமாகக் கொண்டது: ” பிஎல்சியின் சாத்தியமான வாடிக்கையாளர்களிடையே புதிய மற்றும் புதுமையான நிதி தயாரிப்புகளின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம். மேலும், பரிவர்த்தனையின் போது தடைகளைத் தாண்டிச் செல்வதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். பிரச்சாரத்திற்குள், கணிசமான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் பிஎல்சியிடம் இருந்து குத்தகை மற்றும் கடன் வசதிகளைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டியதை நாங்கள் கண்டோம்.

பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் பிஎல்சி, 1996 இல் இலங்கையின் பெரிய அரச வங்கியான மக்கள் வங்கிக்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது.

பீப்பிள்ஸ் லீசிங் தற்போது நாட்டின் மிக உயர்ந்த மதிப்பீடு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனமாகும், இதில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இன்டர்நேஷனலின் ‘B’ மதிப்பீடு (‘இறையாண்மை’க்குக் கீழே ஒரு புள்ளி), ஃபிட்ச் மதிப்பீடுகள் லங்கா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து “AA-(Ika)” மதிப்பீடு மற்றும் பிராண்ட் ஃபைனான்ஸ் பி.எல்.சி.யின் வங்கி சாராத நிதி சேவைகளில் முதலிடம் வகிக்கிறது. இலங்கை வர்த்தக சபையினால் நாட்டின் சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாகவும் இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டது.

பி.எல்.சியின் நிதி சேவை தயாரிப்பு இலாகாவில் குத்தகை, வாகன கடன்கள், நிலையான வைப்புக்கள், சேமிப்புக் கணக்குகள், வீட்டு மற்றும் வணிகக் கடன்கள், தங்கக் கடன்கள், பங்கு பரிவர்த்தனைகளுக்கான இடைத்தரகர் சேவை, தொழிற்படு மூலதன இடர்களை காரணிப்படுத்தல் மற்றும் இஸ்லாமிய நிதி சேவைகள் ஆகியவை அடங்கும்.

எமது குழுமத்தில் ஆறு துணை நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன, அவையாவன; பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் லிமிட்டட், பீப்பள்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிட்டட்,  பீப்பள்ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட்,  பீப்பள்ஸ் லீசிங் பி(f)லீட் மெனேஜ்மென்ட் லிமிட்டட், பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிட்டட், மற்றும் அதனது வெளிநாட்டு வர்த்தக நிறுவனமான (பங்களாதேஷ்) லங்கன் அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகும்.

பீப்பள்ஸ் லீசிங்கின் தனித்துவமான அம்சங்களாவன; ஒரே கூரையின் கீழ் மாறுபட்ட நிதி தீர்வுகளை வழங்குவதற்கான அதன் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை, தடையற்ற, வசதியான மற்றும் நட்பான வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்குவதாகும்.