இடர்களை காரணிப்படுத்தல்


தொடர்ச்சியான சேவையை வழங்கத்தக்க, அபாயங்களை பரிமாற்றக்கூடிய, மற்றும் விற்பனை நிறுவன முகாமைத்துவத்தை வழங்கத்தக்க மூலதனத்துடன் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள். தொழிற்சாலை ஒப்பந்தமொன்றிற்குள் நுழைவதற்கு முன்னர் அதிலுள்ள நம்பகத்தன்மை மற்றும் முயற்சியாண்மையைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அத்துடன், நிர்வகிக்கக்கூடிய தொழில் நிபுணத்துவமிக்கவர்களின் குழுவை உருவாக்கிக்கொள்ளுங்கள். பாரிய நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தரவிலான உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு பட்டியல்கள், காசோலைகள், பற்றுச்சீட்டுக்கள், உபகரணங்களுக்கான விலைக்கழிவுகள் இதில் அடங்குகின்றது. இவ்வனைத்துச் சேவைகளும் பிரதான அலுவலகத்தின், பெக்டரிங் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற, நாடாளவியரீதியில் அமைந்துள்ள கிளை வலையமைப்பினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.


பிரதிபலன்கள்

  • வாடிக்கையாளரின் தேவைகளைக் கருத்திற் கொண்டு செயல்பாட்டு மூலதன சேவைகள்.
  • பிணையாக வைக்கப்படுகின்ற சொத்துக்களை கருத்திற்கொள்ளாது அனைத்து வசதிகளும் தகுதிவாய்ந்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் மூலம் செயற்படுத்தப்படும்.
  • வாடிக்கையாளரின் பலம், உற்பத்தி மற்றும் கலந்துரையாடலின் மூலம் ஆராய்ந்து தேவையான வசதிகள் தீர்மானித்து வழங்கப்படும்.
  • 70% முதல் 80% முகமதிப்புப் பெறுமதியுடைய முற்பணங்கள் காசோலைகள் மற்றும் பற்றுச்சீட்டுக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
  • அவசர மூலதனத் தேவைகளுக்கு ஏற்ப துரித அங்கீகாரம்.