பீப்பள்ஸ் லீசிங் திருகோணமலை கிளை முன்னெடுத்த வெற்றிகரமான இரத்த தான பிரச்சாரம் மாவட்டத்தில் அதிக அளவு இரத்தம் சேகரிக்கப்பட்ட நிகழ்வாக பதிவாகியது


வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கிடையில் நம்பிக்கைக்குரிய தலைமையான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் (பிஎல்சி) திருகோணமலை கிளை, அதன் வருடாந்த இரத்த தான பிரச்சாரத்தை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக நடத்தியன் ஊடாக “உயிர் கொடுங்கள்” முயற்சிக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது.

இரத்த தானம் வழங்குவது தொடர்பிலான ஆர்வம் குறைவாக உள்ள சூழலில், திருகோணமலை பொது வைத்தியசாலையின் வருடாந்த கோரிக்கைக்கு அமைய, பிஎல்சியின் திருகோணமலை கிளையின் ஆண்டு விழாவை முன்னிட்டு இதற்கு சாதகமாக பதிலளித்தது.

திருகோணமலை கிளையின் 19ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டும் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையிலும், 2022 நவம்பர் 27 அன்று, திருகோணமலை கிளையின் கிளை முகாமையாளர் எம். கிருபாகரன் தலைமையிலான குழுவினர் இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் தமது நேரத்தையும், உழைப்பையும் வளங்களையும் தாராளமாக முன்வந்து வழங்கினர்.

தாமாக முன்வந்து இரத்த தானம் செய்த பிஎல்சியின் ஊழியர்கள் உட்பட 156 பேரின் பங்கேற்பானது ஒற்றுமையின் தாராளமான செயலை குறிக்கின்றது. மொத்தமாக கிளைக் குழு 156 இரத்த பொயின்ட்களை (Points) சேகரிக்க பங்களித்ததோடு, ஒரு பிரச்சாரத்தின் ஊடாக மாவட்டத்தில் அதிக அளவு இரத்தம் சேகரித்த நிகழ்வாகவும் அமைந்தது. இந்த முயற்சியானது ஆலோசகரால் விசேடமாக மேற்பார்வை செய்யப்பட்டது. எம்.எப்.சீனா சனூஸ், வைத்தியர் டபிள்யூ.சி.எம்.சமரவீர, வைத்தியர் பி.பிரித்திக்கா மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இணைப்பாளர் திருமதி எஸ்.தெய்வேந்திரன் ஆகியோர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

பிஎல்சி எனப்படுவது  நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் பங்களாதேசில் ஒரு வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவம் வாய்ந்த ஆறு துணை நிறுவனங்களுடன் பன்முகப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.

பிஎல்சி திருகோணமலை கிளை மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் குழுக்கள் இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.