People’s Leasing & Finance PLC (PLC), ஆனது 2023/24 மூன்றாவது காலாண்டில்
மாறும் சந்தை நிலைமைகளுக்கு மத்தியில் வரிக்கு பிந்திய இலாபத்தில் [PAT]
குறிப்பிடத்தக்க 30.8% வளர்ச்சியை அடைந்துள்ளது


இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதிச் சேவை வழங்குநரான பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (PLC), 2023/24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வலுவான நிதியியல் பெறுபேறுகளைப்  பதிவு செய்துள்ளது. 2023/24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின்  9 மாத காலப்பகுதியில்  வரிக்குப் பிந்திய இலாபமாக [PAT] ரூபா  2,141 மில்லியனை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியியல் ஆண்டின் இதே காலப்பகுதியில் வரிக்கு பிந்திய இலாபமாக  1,039 மில்லியன் ரூபாவை பதிவு செய்துள்ள நிலையில் இது இவ்வாண்டு 30.8% அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. இவ் வளர்ச்சியானது    சீரற்ற கட்டணங்கள் மற்றும் பிற இழப்புகளின்   மாற்றத்திற்குக் காரணமாக திகழ்வதுடன் , நிதிச் சிறப்பு மற்றும் மூலோபாய நிதி முகாமைத்துவத்துக்கான  PLC இன் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகிறது.

இந்தக்காலகட்டத்தில் மிதமான வட்டி வருமானம் இருந்தபோதிலும்,   2023/24 நிதியாண்டின் மூன்றாவது காலப்பகுதியில்  [Q3] தேறிய  வட்டி வருமானத்தில் 2.8% பாராட்டத்தக்க உயர்வைப் பதிவு செய்தமையானது  பயனுள்ள நிதியுக்திகள்  மற்றும் விவேகமானமுகாமைத்துவ  நடைமுறைகளைக் குறிக்கிறது.

டிசம்பர் 31, 2023 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் சீரற்ற மாற்றத்துக்கான தொகை  ரூ. 114 மில்லியனுடன் கடன் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பண திரட்டலை ஊக்குவிப்பதில் PLC இன் கவனம் நேர்மறையான முடிவுகளைத் தந்துள்ளது,  முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 94.4% அதிகரித்துள்ளது.

அதன் இருப்பு நிலைக்குறிப்பு மற்றும் கடன்கள் மற்றும் வருமதிகளின் பிரிவை  சரியான அளவீடு செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம், மாறிவரும் சந்தை நடவடிக்கைகளுக்கேற்ப  சாதகமான வர்த்தகச்  சூழலை வழிநடத்துவதில் PLC உறுதியை வெளிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 31, 2023 முடிவடைந்த காலப்பகுதியில் மொத்த சொத்துத் தளம் ரூ. 156,007 மில்லியனை பதிவு செய்துள்ள அதேவேளை , மொத்த கடன்கள் மற்றும் வருமதிகள் பிரிவு  ரூ. 102,275 மில்லியனை பதிவு செய்துள்ளது.

நிதியியல் பெறுபேறுகள்    குறித்து  PLC இன் பிரதம நிறைவேற்றதிகாரி  ஷமிந்த்ரா மார்செலைன் தெரிவிக்கையில் ”விதிவிலக்கான இலாபம் மற்றும் இலாப வளர்ச்சியை அடைவதற்காக வளர்ச்சியடைந்து வரும் சந்தை நிபந்தனைகள் ஊடாக  நாங்கள் மூலோபாய ரீதியில் செயற்பாடுகளை மேற் கொண்டுள்ளோம். அதே வேளை  எங்களின் ஐந்தொகையை  வலுப்படுத்துவதுடன்  மற்றும் குறைபாடு இடர்களையும் குறைத்துள்ளோம்.  வளர்ந்து வரும் பொருளாதார மீட்சியுடன், PLCயானது  வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும், பங்குதாரர்களுக்கு நிலையான பெறுமதியை  வழங்குவதற்கும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.”

மேலும்  , PLC குழுமம் டிசம்பர் 31, 2023 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் வரிக்கு பிந்திய இலாபத்தில்[PAT]   குறிப்பிடத்தக்க 23.2% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இது நேர்மறையான வளர்ச்சி வேகத்தை பிரதிபலிக்கின்றது. சொத்துக்கள், கடன்கள் மற்றும் வருமதிகள் கணிசமானதாக உள்ளதன் காரணமாக இது இலங்கையின் வங்கி அல்லாத நிதிச் சேவைத் துறையில் முன்னணியில் உள்ள PLC இன் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அதன் வலுவான நிதியியல் பெறுபேறுகள்  மற்றும் மூலோபாய நெகிழ்வுத்  தன்மையுடன், PLC யானது இலங்கையின் பொருளாதார செழுமைக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் திகழ்வதுடன் நம்பகமான நிதிப் பங்காளியாக அதன் மதிப்பிற்குரிய பாரம்பரியத்தை நிலைநிறுத்துகிறது.

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் [PLC ] ஆனதுமக்கள் வங்கியின் துணை நிறுவனமாக திகழ்வதுடன் மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) பிரதான சபையில் பொதுவில் பட்டியலிடப்பட்ட வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக  ஐந்து துணை நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகளுடன்  இயங்குகிறது; பீப்பிள்ஸ் லீசிங் ஃப்ளீட் மேனேஜ்மென்ட் லிமிடெட், பீப்பிள்ஸ் லீசிங் பிரொப்பர்ட்டி டெவலப்மென்ட் லிமிடெட், பீப்பிள்ஸ் லீசிங் ஹவலொக் பிரொப்பர்டீஸ் லிமிடெட், பீப்பிள்ஸ் மைக்ரோஃபினான்ஸ் லிமிடெட் மற்றும் பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் லிமிடெட்.. நாடளாவிய ரீதியில் 100க்கும் மேற்பட்ட கிளைகளை உள்ளடக்கிய விரிவான வலையமைப்புடன், PLC ஆனது நம்பகமான நிதிச் சேவைகளை வழங்குவதற்கும் இலங்கையின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு பங்களிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது.