தகவல் அறியும் உரிமை


தகவலுக்கான உரிமை பற்றிய 2016இன் 12ஆம் இலக்கச் சட்டத்திற்கு அமைவானது

தகவலுக்கான வேண்டுகோள்கள் கீழ்க்காணும் தகவல் அதிகாரியிடம் வேண்டுகோள் ஒன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் விடுக்கப்படலாம். RTI 01 படிவத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள முறையில் வேண்டுகோள் படிவத்தை நிரப்பிக் கையளிப்பது விரும்பத்தக்கது. (ஆனால், இது கட்டாயமானதல்ல)

தகவல் அதிகாரி,

பெயர்:திருமதி ஸாயிரா கலீல்
பதவி:சிரேட முகாமையாளர் – AGM இணக்கப்பாடு
முகவரி:பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி., இல.1161, மருதானை வீதி, கொழும்பு 08
தொலைபேசி இல:0112-631631
மின்னஞ்சல்:rti@plc.lk
  1. வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ வேண்டுகோளைச் சமர்ப்பித்ததும், அதற்கான ஏற்புக் கடிதம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

  2. கோரப்பட்ட தகவல் வழங்கப்படுமா இல்லையா என்பது இயன்றளவு விரைவாக, எவ்வாறிருப்பினும், 14 நாட்களுக்குள், தெரிவிக்கப்பட வேண்டும்.

  3. தகவலை வழங்குவதற்கு முடிவு செய்யப்படுமாயின், தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினால் குறித்துரைக்கப்பட்டுள்ள கட்டண அட்டவணைக்கு அமைவான கட்டணம் ஒன்றைச் செலுத்தும் பட்சத்தில் தகவல் வழங்கப்படும் என்பதைத் தகவல் கோரியவருக்குத் தகவல் அதிகாரி அறிவிப்பார். கோரப்பட்ட தகவல் கட்டணக் கொடுப்பனவு ஒன்றிற்கு உட்பட்டதாயின், கொடுப்பனவு செலுத்தப்பட்ட 14 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும். கட்டணக் கொடுப்பனவு தேவையற்றதெனின், தீர்மானம் எடுக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படும்.

  4. கொடுப்பனவு செலுத்தப்பட்ட 14 நாட்களுக்குள் தகவலை வழங்க முடியாவிட்டால், தகவலை வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் – ஆகக்கூடியதாக 21 நாட்கள் – தேவை என்பதைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களும் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

  5. கோரப்படும் தகவல் ஒரு பிரஜையின் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரம் பற்றியதாக இருந்தால், தகவல் அதிகாரி 48 மணிநேரத்திற்குள் அந்த வேண்டுகோளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

  6. பின்வரும் சந்தர்ப்பங்களில் மேன்முறையீடு செய்யப்படலாம்,
  • தகவலுக்கான ஒரு வேண்டுகோள் தகவல் அதிகாரியினால் மறுக்கப்படுதல்.
  • சம்பந்தப்பட்ட தகவல் பிரிவு 5இன் கீழ் வழங்கப்பட முடியாதது என்ற அடிப்படையில் தகவல் அதிகாரியினால் மறுக்கப்படுதல்.
  • சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள கால அட்டவணைக்கு இணங்காதிருந்தல்.
  • தகவல் அதிகாரியினால் பூரணமற்ற, தவறாக வழிநடத்தும் அல்லது பொய்யான தகவல் வழங்கப்படுதல்.
  • தகவல் அதிகாரியினால் அளவுக்கதிகமான கட்டணம் அறவிடப்படுதல்.
  • வழங்கப்பட்ட தகவல் திரிபுபடுத்தப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது அல்லது அடைய முடியாதபடிக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கருத தகவலைக் கோரியவருக்கு நியாயமான காரணங்கள் இருந்தல்.

மேன்முறையீடானது 14 நாட்களுக்குள் பின்வரும் நியமிக்கப்பட்ட அதிகாரிக்குச்.

அதிகாரிக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,


பெயர்:திரு. உதே குணவர்தன
பதவி: முதன்மை இயக்கு அலுவலர்
Address:பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி., இல.1161, மருதானை வீதி, கொழும்பு 08
தொலைபேசி இல:0112-631631
மின்னஞ்சல்:udesh@plc.lk
7. இந்த அறிவித்தலின் சரத்து 06க்கு அமைவாக வேண்டுகோள் ஒன்றைச் சமர்ப்பிக்கும்போது, RTI 10 படிவம் நிரப்பப்பட்டு, நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் கையளிக்கப்பட வேண்டும். RTI 10 படிவம் கட்டாயமானதல்ல. மேன்முறையிட்டிற்கான காரணத்தை நியாயப்படுத்தும் வகையில், RTI 10 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுடன் கடிதம் ஒன்றை எழுதுவதன் மூலமும் ஒரு பிரஜை தனது மேன்முறையீட்டைச் சமர்ப்பி;க்கலாம்.