நாங்கள் யார்

மக்கள் குத்தகை மற்றும் நிதி PLC: நம்பகமான தலைவர்

நாங்கள் யார்

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது மக்கள் வங்கியின் துணை நிறுவனமாவதுடன் கொழும்பு பங்குச் சந்தையின் (சீ.எஸ்.சீ) பிரதான வாரியத்தில் வரையறுக்கப்பட்ட பொறுப்பினையுடைய நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. எமது குழுமத்தில் பீப்பள்ஸ் லீசிங் பிலீட் மெனேஜ்மென்ட் லிமிட்டட்இ பீப்பள்;ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட் பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிட்டட் பீப்பள்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிட்டட் மற்றும் பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் லிமிட்டட் ஆகிய ஐந்து துணை நிறுவனங்கள் அடங்குகின்றன. நாம் சந்தைப்போட்டிக்குள் பிரவேசித்த ஆறு வருடங்கிளிலேயே லீசிங் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமாக திகழத்தக்கதாக முன்னேறியிருக்கிறோம். மேலும் நாம் பெற்ற இவ்வெற்றியை பத்து வருடங்களுக்கும் மேலாக தக்கவைத்துக்கொள்வதில் வெற்றியடைந்துள்ளோம். 2012 நவம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்புக் குழுவினரால் 2011 ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் எமக்கு நிதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் நாம் இப்போது வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் முன்னணியில் திகழுகின்றோம்(சொத்தின் அடிப்படையில்).

எமது கடந்த தசாப்தங்களில் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது இலங்கை மக்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட நிதியியல் சேவைகளை பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 100 க்கும் மேற்பட்ட கிளைகளினூடாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊழியர்களை உள்ளடக்கிய சிறந்த அணியின் மூலமாக எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்குரிய நிதித் தேவைகளை அவர்கள் வழங்கப்பட்டதுடன் வகையில் எம்மிடமுள்ள பரந்தளவிலான நிதியியல் தீர்வுகளைக்கொண்டு சேவைகளை வழங்கி வருகின்றோம். எமது நிதித் தீர்வுகளில் பிரதானமாக நிதியியல் லீசிங் வகைகள் கடன் வசதிகள் வைப்புக்கள்(நிலையான மற்றும் சேமிப்பு வைப்புக்கள்) மற்றும் இஸ்லாமிய நிதித் தீர்வுகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் எமக்கு வெளிநாட்டு பணத்தாள்கள் மற்றும் நாணயங்களை கொள்வனவு செய்வதற்கு விற்பனை செய்வதற்கு மற்றும் பயணிகள் காசோலைகளை பணமாக்குவதற்குரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தும் நாம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றோம். பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது தற்போதைய இலங்கையின் நிதியியல் வர்த்தகத் துறையில் அதிசிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்கத்தக்க வகையிலேயே எமது உற்பத்தி மூலோபாயங்கள் மிகவும் அவதானமான வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது நிதியியல் சேவைகள் துறையில் செயற்பட்டு வருவதுடன் கொழும்பு பங்கு சந்தையின் பிரதான வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு இலங்கை மத்திய வங்கி இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் நேரடி தீவிர கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது

எமது நோக்கம்

வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஆக்கபூர்வமான புத்தாக்கமுள்ள சிறந்த பூரணமான நிதியியல் சேவைத் தீர்வை பெற்றுக்கொடுக்கத்தக்க சேவை வழங்குனராகத் திகழல்.

எமது குறிக்கோள்

போட்டிமிக்க நிலையான பிரதிபலன்களை பெற்றுக்கொடுத்தவாறு நிறுவன ரீதியாக அதிசிறந்த பெறுமதி சேர்க்கப்பட்ட அர்ப்பணிப்புடனான வாடிக்கையாளர் சேவையை அதியுயர் தரத்தில் வழங்கல்.

அடிப்படை விழுமியங்கள்.

  • பொருளாதார நம்பகத்தன்மை
  • சூழலியல் பொறுப்பு
  • சமூகப் பொறுப்பு

எமது முக்கிய வகையீடுகள்

  • அர்ப்பணிப்புள்ள மற்றும் திறமைமிகு சேவைக் குழாம்.
  • எமது பல்வகைமை மிக்க முதலீடுகள்.
  • வெளிப்புறச் சூழல் போக்குகளின் மாற்றங்களுக்கேற்ப பதிலளிக்கத்தக்க ஆளுமை.

பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின்

இலங்கை DFCC வங்கியின் சிரேஷ்ட உப தலைவரும் நிறுவன வங்கிச் சேவைப் பிரதானியுமாகிய திரு. ஷமிந்திர மார்செலின், 2020 நவம்பர் 20ஆம் திகதி தொடக்கம் பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொது முகாமையாளராகவும் இணைந்துள்ளார்.

HSBC குழுமத்திற்காக வெளிநாடுகளில் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிச் சேவைகளில் பரந்த அனுபவத்தையும் பெற்ற வங்கியாளரான திரு. மார்செலின், பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மூலோபாய முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் வங்கித் துறை சார்ந்த தனித்துவமான நுண்ணறிவைக் கொண்டுள்ளார்.

அவர் DFCC வங்கியில் சேவையாற்றியபோது, அந்த வங்கியின் நிறுவன வங்கிச் சேவை மூலோபாயங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், மாலைதீவைச் சேர்ந்த பிரபல கம்பனி ஒன்றினால் பெறப்பட்ட இரட்டைத் தவணை இருதரப்புக் கடன் வசதிக்கான தனி ஆலோசகர் மற்றும் கட்டமைப்பு வங்கிக்குரிய அதிகாரமளிப்பை DFCC பெற்றுக்கொள்வதில் அவர் முக்கிய பங்கினை வகித்தார். இலங்கை DFCC வங்கியினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய கடன் வசதி இதுவாகும்.

வங்கியின் நிறைவேற்றுக் குழு, சொத்து மற்றும் பொறுப்புக் குழு, செயற்பாட்டு இடர் முகாமைத்துவக் குழு ஆகியவற்றின் அங்கத்தவர் என்ற முறையில் வங்கியின் நிறுவன முன்முயற்சிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு திரு. மார்செலின் முக்கியமான மூலோபாய பங்களிப்பினை வழங்கினார்.

HSBC குழுமத்தின் மாலைதீவு நாட்டிக்கான முகாமையாளர் என்ற முறையில் வெவ்வேறு பதவிகளில் செயலாற்றியதைத் தொடர்ந்தே அவர் DFCC வங்கியில் இணைந்தார்.

மாலைதீவில் வங்கித் தொழிற்றுறையின் புரட்சிகரமான மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்த அவர், அந்த வேளையில் மாலைதீவின் மிகப் பெரிய சொத்துத் திரட்டலுக்கும் பொறுப்பாக இருந்தார்.

அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் நிறுவன சொத்து, சர்வதேச உப நிறுவன வங்கிச் சேவை மற்றும் அரச துறை என்பவற்றை உள்ளடக்கிய வணிக மற்றும் உலகளாவிய வங்கிச் சேவை வியாபாரத்தின் வளர்ச்சி அவரது தலைமையிலும் வழிகாட்டுதலிலும் ஒரு வலுவான ஒட்டுமொத்த வங்கிச் சேவை முன்முயற்சியாக விரிவடைந்தது. இதில் இலாப-நட்ட பொறுப்பும் அடங்கியிருந்தது. முக்கிய பங்காளிகள் மற்றும் வியாபாரத் தலைவர்களுடன் மூலோபாய உறவுகளைக் கட்டியெழுப்பவும் அவற்றைத் தொடர்ச்சியாகப் பேணவும் DFCC வங்கிக்கு இடமளிக்கும் விதத்தில், உறவுமுறை மற்றும் வங்கிச் சேவைத் திட்ட முகாமையாளர்களின் அணி ஒன்றினை அவர் வெற்றிகரமாக மேற்பார்வை செய்து வழிநடத்தினார்.

DFCC வங்கியில் இணைவதற்கு முன்னர் திரு. மார்செலின் HSBC ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவின் நிதி நிறுவனங்கள் குழு மற்றும் அரச துறையின் பிரதானியாகக் கடமையாற்றினார்.

இலங்கை இறையாண்மை பத்திர மற்றும் குவாஸி இறையாண்மைப் பத்திர நிறுவனங்களின் வெற்றிகரமான முகாமைத்துவம், HSBC குழுமத்தின் முதலீட்டு வங்கியியல் மூலோபாயத்தின் அமுலாக்கம் என்பன அவரது முக்கிய சாதனைகளில் உள்ளடங்கும்.

திரு. மார்செலின் இலங்கையின் வங்கிச் சேவை மற்றும் நிதிச் சேவை துறைகளில் வலுவான தகைமைகளைக் கொண்டுள்ளார். இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளை உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்துவதற்கும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, பிரபல அரச மற்றும் தனியார் வணிக வங்கிகள் ஆகியவற்றினால் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட பல்வேறு முதலீட்டு ஊக்குவிப்புப் பிரசார நிகழ்ச்சிகளில் அவர் பங்குபற்றியுள்ளார்.

திரு. மார்செலின் 1993ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள கொழும்பு சர்வதேசப் பாடசாலையில் உயர் கல்வியை முடித்துக்கொண்டார். லண்டன், நகர பல்கலைக்கழகத்திடமிருந்து 1996இல் பொருளியல் மற்றும் கணக்கியல் துறையில் BSc பட்டம் பெற்ற அவர், நிதி ஆலோசகர்களின் சர்வதேசத் தகைமை (FAIQ), ஐக்கிய இராச்சியத்தின் சாட்டர்ட் இன்சூரன்ஸ் நிலைய தகைமை (2008) ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.


முன்னைய பிரதம நிறைவேற்று அதிகாரி முகாமைப் பணிப்பாளர் (1997 – 2017), திரு. டீ. பீ. குமாரகே

பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் துணை நிறுவனங்களின் முகாமைப் பணிப்பாளரான திரு. டீ. பீ. குமாரகே அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியில் 20 வருட ஆக்கபூர்வமான திறன்மிக்க தொடர் சேவையினை நிறைவு செய்தார். பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது 1995 ஆம் ஆண்டு மக்கள் வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது. திரு. குமாரகே அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். திரு குமாரகே அவர்களது இலக்கை நோக்கிய தலைமைத்துவமானது நிறுவனத்தை மிகக் குறுகிய காலத்தில் வெற்றியை நோக்கிய பாதையில் இட்டுச் சென்றது. திரு. குமாரகே அவர்கள் நிறுவனத்தை லீசிங் துறை மற்றும் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனம் என்ற வகையில் முன்னிலையில் திகழத்தக்க நிறுவனமாக மாற்றுவதற்குரிய தலைவராக திகழ்ந்தார் என்பதை மறுக்க முடியாது. கொழும்பு பங்கு சந்தையில் முன்னணியில் திகழத்தக்க நிறுவனமாக மாற்றியதுடன் வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மாத்திரமன்றி வங்காளதேசத்திலும் விஸ்தரித்தார். திரு. குமாரகே என்ற நாமம் பீப்பள்ஸ் லீசிங் கம்பனி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நாமமாகும்.

முக்கிய மைல்கற்கள்

1995 / 96

பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரையறுக்கப்பட்ட பொறுப்பினையுடைய மக்கள் வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது

1996 / 97

ரூபா 10 மில்லியன் மூலதனம் மற்றும் மூன்று ஊழியர்களுடன் 1996 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

1997 / 98

தனது முதலாவது கிளையை கண்டியில் திறந்து வைத்தது.

பம்பலப்பிட்டியின் தமது பிரதான அலுவலகத்தை கொழும்பு 02 க்கு மாற்றியது.

1999 / 00

தமது பிரதான அலுவலகத்தை கணினிமயமாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

லீசிங் துறையில் 4 ஆவது இடத்தை சுவீகரித்தது.

2000 / 01

வரையறுக்கப்பட்ட பொது உடைமை நிறுவனமாக தமது புதிய கூட்டு வர்த்தக சின்னத்தை அறிமுகம் செய்தது.

வாகன முற்றத்தை பொரல்ல மக்கள் வங்கி வளாகத்தில் திறந்து வைத்தது.

2001 / 02

வாடிக்கையாளருக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக தமது கிளைகளை ஒன்லைன் முறைமையூடாக இணைத்தது.

2002 / 03

முதற் தடவையாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி லீசிங் துறையில் இலங்கையின் முன்ணணி நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது.

2004 / 05

ICASL இனது வருடாந்த அறிக்கை விருதுகளில் “இரண்டாமிட” விருதினை தமது முதல் விருதாக சுவீகரித்தது

2005 / 06

இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2006 / 07

தமது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.plc.lk ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2007 / 08

'Window Office' முறைமையை அறிமுகம் செய்து வைத்ததன் ஊடாக தமது வாடிக்கையாளர்களது நலன் கருதி ஒவ்வொரு மக்கள் வங்கிக் கிளையிலும் தமது சேவை மையத்தை ஆரம்பித்து வைத்தது.

2008 / 09

வேறுபட்ட நடவடிக்கைகள் பீப்பள்ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் பிலீட் மெனேஜ்மன்ட் லிமிட்டட் ஆகிய துணை நிறுவனங்களினால் மேற்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டது.

2009 / 10

செலான் மெர்ச்சன்ட் லீசிங் பிஎல்சி நிறுவனம் தன்னகப்பட்டது.

பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் லிமிட்டட் உருவாக்கப்பட்டது.

2010 / 11

பீப்பள்ஸ் மைக்ரோ ஃபினேன்ஸ் லிமிட்டட் ஆரம்பிக்கப்பட்டது.

பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்டீஸ் லிமிட்டட் ஆரம்பிக்கப்பட்டதுடன் குழும நிறுவனங்கள் ஒருங்கிணைக்க முடிந்தது.

2011 / 12

பொரளையில் புதிய பிரதான அலுவலகம் அமைக்கப்பட்டது.

பொது மக்களுக்கான அதிக சலுகைகளை பெற்றுக்கொடுப்பதால் பொது உடைமை நிறுவனமாக மாறியது.

2012 / 13

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆக உருவெடுத்தது.

வருடத்தின் நிதியியல் சேவை வழங்குனராக முதற் தடவையாக SLIM Nielsen மக்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முதற் தடவையாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பத்து “Best corporate Citizen” இல் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டது.

இரு வெளிநாட்டு தரப்படுத்தல்கள் கிடைக்கப்பெற்றன. 'Standard and Poor' (B+/B) 'Fitch Rating International' (B+)B+

நாடளாவிய ரீதியில் 100 கிளைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2014 / 15

காபன் சான்றிதழ் நிறுவனமாக தரமேற்றப்பட்டது.

வியாபாரப் பெறுமானம் 6 பில்லியனை தாண்டிய முதலாவது வங்கியல்லா நிதி நிறுவனமாக 2014 நவம்பரில் தெரிவானது.

2015 / 16

வியாபாரப் பெறுமானம் 7 பில்லியனை தாண்டிய முதலாவது வங்கியல்லா நிதி நிறுவனமாக 2016 செப்டம்பரில் தெரிவானது.

பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் இன்ஷ்ஷூரன்ஸ் துணை நிறுவனமானது பொது நிறுவனமாக பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் பிஎல்சி ஆக மாறியது.

2016 / 17

பீப்பள்ஸ் லீசிங் கம்பனி 20 வருட சேவைக் காலத்தை எட்டியது.

வங்காளதேசத்தில் தமது சேவையை ஆரம்பித்தது.