இரண்டாவது முதுநிலை தடகள (திறந்த) சாம்பியன்ஷிப் – 2022இல் திறமையை வெளிப்படுத்திய பீப்பள்ஸ் லீசிங்


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் (பீப்பள்ஸ் லீசிங்) முதுநிலை தடகள வீரர்கள் 2022 ஒக்டோபர் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மாத்தறை, கோட்டாவிலவில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இரண்டாவது முதுநிலை தடகள (திறந்த) சாம்பியன்ஷிப் – 2022 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை தெற்கு முதுநிலை தடகள சங்கம் இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. நிதி, வங்கி அல்லாத நிதி, தனியார் மற்றும் அரச துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதுநிலை விளையாட்டு வீரர்கள் இந்த இரண்டு நாள் நிகழ்வில் பங்கேற்றனர்.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தைச் சேர்ந்த பதினைந்து வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். பீப்பள்ஸ் லீசிங் “சிறந்த 10 நிறுவனங்கள்” பிரிவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றது. பீப்பள்ஸ் லீசிங்கின் முதுநிலை தடகள வீரர்கள் 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

பீப்பள்ஸ் லீசிங்கின் கோவிந்த சதீப ஆடவர் பிரிவில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் பரிதி வட்டம் எறிதல் ஆகிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதோடு ஆடவர் திறந்த பிரிவில் சாம்பியனாகவும் தெரிவானார்.

45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் பீப்பள்ஸ் லீசிங்கின் வஜிர ராமநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றார். ஷெர்மன் பெர்னாண்டோ 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். சமந்த செனவிரத்ன 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் 400 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

400 மீற்றர் திறந்த ஆடவர் பிரிவில் கந்துல ஜயசுந்தர வெள்ளிப் பதக்கத்தையும், சந்தரு சாமிக்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.  திறந்த ஆடவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நதுன் சில்வா, திறந்த ஆடவர் 200 மீட்டர்  ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். 50 வயதுக்கு மேற்பட்ட  ஆடவர் சம்மட்டி எறிதல் போட்டியில் சம்பத் பிரசங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றதோடு, 45 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் சம்மட்டி எறிதல் போட்டியில் உஜித் வசந்த வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பீப்பள்ஸ் லீசிங் என்பது இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமாகும். மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் என்பது பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவம் வாய்ந்த ஆறு துணை நிறுவனங்களைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாகும்.

இரண்டாவது முதுநிலை தடகள (திறந்த) சாம்பியன்ஷிப் – 2022ஐ பிரதிநிதித்துவப்படுத்திய பீப்பள்ஸ் லீசிங் தடகள அணி