பிரான்ட் ஃபினான்ஸ் சுட்டெண் 2019 இல் “சிறந்த வங்கிசாரா நிதி நிறுவனம்” எனும் நிலையை பீப்பள்ஸ் லீசிங்


இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் மக்கள் மனமறிந்த நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் பிரான்ட் ஃபினான்ஸ் சுட்டெண் 2019 இல் இலங்கையின் சிறந்த வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிதிச் சேவைகள் பிரிவில் “அதிகளவு விரும்பப்படும் நாமம்”, எனும் தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

LMD இன் வருடாந்த வர்த்தக நாம சஞ்சிகையில்இ இலங்கையின் உறுதியான மற்றும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களை பிரான்ட் ஃபினான்ஸ் சுட்டி தரப்படுத்துகின்றது. இலங்கையில் காணப்படும் முன்னணி வர்த்தக நாம மதிப்பிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனமாக பிரான்ட் ஃபினான்ஸ் லங்கா திகழ்கின்றது.

2019 இல் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் ரூ. 8.7 பில்லியன் வர்த்தக நாம பெறுமதி மற்றும் AA கடன் தரப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அதன் வர்த்தக நாம தரப்படுத்தலை பிரான்ட் ஃபினான்ஸ் லங்கா முன்னெடுத்திருந்தது. மேலும் ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதித் தீர்வுகளை வழங்கும் நிதி நிறுவனமாக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தை பிரான்ட் ஃபினான்ஸ் பரிந்துரைத்துள்ளதுடன் உறுதியான வாடிக்கையாளர் இருப்பைக் கொண்ட நிறுவனமாகவும் குறிப்பிட்டுள்ளது.

அரச துறையின் நம்பிக்கை மற்றும் தனியார் துறையின் வினைத்திறன் ஆகியவற்றைக் கொண்ட நிறுவனமாக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தை பிரான்ட் ஃபினான்ஸ் பரிந்துரைத்துள்ளதுடன் இதனூடாக இலங்கையில் காணப்படும் ஏனைய நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், முன்னிலையில் திகழச் செய்ய ஏதுவாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிதி மற்றும் நிதிசாரா நிறுவனங்களின் தரவூகளின் பிரகாரம், சுயாதீன சந்தைப்படுத்தல் ஆய்வு நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டுஇ 100 மிகப் பெறுமதி வாய்ந்த மற்றும் உறுதியான வர்த்தக நாமங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.

இலங்கையின் வர்த்தக நாமங்களின் பெறுமதிகளை கண்டறியும் பிரான்ட் ஃபினான்ஸ் லங்காவின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளதுடன், இலங்கை அடங்கலாக பல நாடுகளில் கிளை வலையமைப்பினூடாக பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.

பிரான்ட் ஃபினான்ஸ் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் ரிச்சர்ட் ஹெய்க், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தொடர்பாக குறிப்பிடுகையில், “தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் உறுதியான நிலையை பீப்பள்ஸ் லீசிங் கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் உறுதியான கிளை வலையமைப்பு மற்றும் பரந்தளவு நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு நட்பான வகையில் சிக்கல்களின்றி வழங்குவது போன்றன இதற்கு ஏதுவாக அமைந்துள்ளன.” என்றார்.

பீப்பள்ஸ் லீசிங் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில் “தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தை பிரான்ட் ஃபினான்ஸ் லங்கா பரிந்துரைத்துள்ளது.

இதனூடாக எமது வாடிக்கையாளர்கள் பீப்பள்ஸ் லீசிங் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தமது நிதிச் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக எமது சேவைகளை தெரிவு செய்தமைக்காக எம் வாடிக்கையாளர்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியடைய முடியும்.” என்றார்.