வாடிக்கையாளர்கள் அதிக உயரங்களை தொடுவதற்கு பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் ஒத்துழைக்கிறது


இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் (நிறுவனம்) இலங்கையில் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, அதன் மூலம் வாடிக்கையாளர்களை அதிக உயரங்களை அடைய உதவுகிறது.

நிறுவனம் வழங்கும் பல்வேறு நிதி தீர்வுகள் பல மிகச் சிறிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. சாதாரணமாக முறையான வங்கித் துறையில் இருந்து நிதி தீர்வைப் பெற முடியாத மக்களுக்கும் கூட நிறுவனம் நிதியுதவிக்கான அணுகலை வழங்குகிறது.

சவாலான காலங்களில், வாடிக்கையாளர்களின் நிதி வரம்புகளை சமாளிக்கவும், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வணிகங்களை மீட்டெடுக்கவும் நிறுவனம் உதவியுள்ளது. கொவிட் – 19 தொற்று நோய் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது, பாதிக்கப்பட்ட பல வாழ்வாதாரங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிறுவனம் நிதி நிவாரணம் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கியுள்ளது.

வாழ்வாதாரம் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதன் மூலம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பிரதீப் அமிர்தநாயகம் தெரிவித்துள்ளார். “நாங்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத் துறையில் கவனம் செலுத்துகிறோம்,” என அவர் வலியுறுத்தினார். “எங்கள் நம்பகமான வாடிக்கையாளர் நட்பு நிதித் தீர்வுகள் மற்றும் சேவையின் சிறப்பின் மூலம், நாங்கள் மிகச் சிறிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துகிறோம், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறோம்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.

அமிர்தநாயகத்தின் கூற்றுப்படி, நிறுவனத்தால் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் அணுகக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்க முடியும். இது ஒரு விரிவான கிளை வலையமைப்பால் ஆதரிக்கப்படும் ஒரு ஆற்றல்மிக்க பணியாளர் மற்றும் டிஜிட்டல் வசதியால் வழங்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ஒரு பொறுப்பான நிதி நிறுவனம் என்ற வகையில், வணிகங்களுக்கு உதவுவதில் நிறுவனம் முக்கிய பங்காற்றியதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும்/பொது முகாமையாளருமான ஷமிந்திர மார்செலின் தெரிவித்துள்ளார்.  “நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் வாழ்வாதாரங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் வணிகங்களை புத்துயிர் பெறுவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் இது தெளிவாகிறது,” என அவர் வலியுறுத்தியுள்ளார். 105,000ற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சலுகைகள் பிஎல்சியின் இன் சொந்த இருப்புநிலையிருந்து வழங்கப்பட்டுள்ளது. 2019 முதல் நிறுவனம் மிகச் சிறிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 85 பில்லியன்களை வழங்கியுள்ளது.

மார்செலினின் கூற்றுக்கு அமைய, நிறுவனம் வாடிக்கையாளர் நட்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையை அதிக நெகிழ்வுத்தன்மையுடன் வழங்குவதன் மூலம் தொடர்ந்து வேறுபடுகிறது. வாடிக்கையாளர் நட்பு, வசதி மற்றும் அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை நிறுவனம் மேலும் விரிவுபடுத்தும்.  “வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் இடையூறு இல்லாத அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது, நாட்டின் தனியார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு குத்தகை தீர்வுகளை வழங்கி, பொதுமக்களுக்கு வசதியான தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்குகிறது. இருப்பினும், தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, பெரும்பாலான தனியார் பயணிகள் போக்குவரத்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை பல மாதங்களாக இயக்க முடியாமல் பொருளாதார ரீதியாக நட்டத்தில் உள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழலில், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் பயணிகள் போக்குவரத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக “ஹித்தமிதுரு” நிதி நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

“ஹித்தமிதுரு” திட்டம் சலுகை வட்டி விகிதங்களுடன் ஒரு கட்டண ஒத்திவைப்பு திட்டமாக வழங்கப்படுவதோடு, 6 – 12 மாதங்கள் கட்டண ஒத்திவைப்பு காலத்தையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் நிவாரணக் கட்டண காலத்திற்குப் பின்னர், முன்னைய மீளச் செலுத்தும் விகிதத்தில் தங்கள் வாடகைக் கொடுப்பனவுகளைத் தொடரும் சலுகையும் வழங்கப்பட்டது.

100ற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 2,400 ஆற்றல்மிக்க பணியாளர்களின் விரிவான வலையமைப்புடன், நிறுவனம் 1996 இல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து  நீண்ட தூரம் பயணித்துள்ளது. திறமையான குழு மற்றும் நவீன தொழில்நுட்ப திறன்கள் தவிர, நிறுவனம் விவேகமான முகாமைத்துவ அமைப்புகளையும் வலுவான மூலதனத்தையும் கொண்டுள்ளது. இன்று, நிறுவனம் நம்பகமான வாடிக்கையாளர் நட்பு நிதிச் சேவை வழங்குனராக அதன் நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளதோடு வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் அசைக்க முடியாத விசுவாசத்தையும், நம்பிக்கையையும் ஒரே மாதிரியாகப் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் அரசுக்கு சொந்தமான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனம் என்பதோடு, 1996 இல் ஒரு விசேட குத்தகை நிறுவனமாக வணிக நடவடிக்கைகளை ஆரம்பித்தது.  2011இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங்கானது பன்முகப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ச்சியடைந்துள்ளது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.

பிரதீப் அமிர்தநாயகம் தலைவர் பீப்பள்ஸ் லீசிங் பினான்ஸ் பிஎல்சி
ஷமிந்திர மார்செலின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் பீப்பள்ஸ் லீசிங் பினான்ஸ் பிஎல்சி
வாடிக்கையாளர்கள் அதிக உயரங்களை தொடுவதற்கு உதவுகிறது