இணையற்ற திறன்களுடன் பீப்பள்ஸ் லீசிங் அறிமுகப்படுத்தியுள்ள மும்மொழியிலான Mobile App


பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனம் (People’s Leasing & Finance PLC) PLC Touch என்ற பெயரில் மும்மொழியிலான கையடக்கத்தொலைபேசி செயலியொன்றை (Mobile App) அறிமுகப்படுத்துவதற்கு அண்மையில் நடவடிக்கை எடுத்தது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனம் எனும் அரசாங்கத்துக்குச் சொந்தமான வங்கில்லா முன்னணி நிதி நிறுவனமாகும். இலங்கையில் இந்த வகையிலான செயலியில் காப்புறுதி தொடர்பான அம்சம் முதல் தடவையாக உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இதுபோன்ற பல இணையற்ற வசதிகள் PLC Touch கையடக்கத்தொலைபேசி  செயலியில் காணப்படுகின்றன.

இந்த செயலியின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான திரு. ஷமிந்திர மார்சலின் குறிப்பிடுகையில், “காப்புறுதி தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வகையான உற்பத்தியை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் முதலாவது வங்கியில்லாத நிதி நிறுவனமாக நாம் விளங்குவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். தற்போதைய சூழ்நிலையில் இது பயனாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சௌகரியமான அனுபவத்தை வழங்கும். எந்தவொரு கிளை அலுவலகத்துக்கும் நேரடியாகச் செல்லாது ஒருவர் தனது வீட்டில் இருந்தவாறே ஒரு தொடுகையின் ஊடாக அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ள முடியும். வங்கிகளுக்கு மாத்திரமன்றி ஏனைய அனைத்துத் தொழில்துறையின் எதிர்காலமும் இவ்வாறானதாகவே அமையும் என நாம் நம்புகின்றோம். காலப்போக்கில் புதிய நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் வங்கியல்லா நிதிச் சேவைத் துறைக்கு பல முன்மாதிரிகளை அறிமுகப்படுத்தி வருகின்றோம்” என்றார்.

இந்தக் கையடக்கத்தொலைபேசி செயலி பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதன் ஊடாக பெருந் தொகையான பணத்தை சேமிக்க முடியும் என்றும் இந்நிறுவன குழுமத்தின் தகவல் தொடர்பாடல் பிரதிப் பொது முகாமையாளர் திரு.பிரபாத் குணசேன தெரிவித்தார். இவ்வாறு சேமிக்கப்படும் தொகையை எதிர்காலத்தில் நிறுவனத்தின் சமூகக் கூட்டுப்பொறுப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

“எமது நிறுவனத்திலிருந்தே இந்த செயலியை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் கிடைத்தமை எமக்குப் பெருமையாக உள்ளது. இது மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் பன்முகத்தன்மை மற்றும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. எந்தவொரு நபரும் சிரமங்கள் இன்றி இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இதனை வடிவமைத்துள்ளோம்” என பிரபாத் குணசேன மேலும் தெரிவித்தார்.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தின் சேமிப்புக் கணக்குக்கு அப்பால் வேறு எந்தவொரு வங்கியிலும் உள்ள எந்தவொரு சேமிப்புக் கணக்கும் PLC Touch செயலியில் சேர்த்துக் கொள்ளல் (mapping)  ஊடாக எந்தவொரு கணக்கின் மூலமும் QR குறியிட்டை அடிப்படையாகக் கொண்ட கொடுப்பனவுகள், நுகர்விற்கான கொடுப்பனவுகள் (Utility Bills) செலுத்தல் மற்றும் விரும்பிய எந்தவொரு கணக்கைப் பயன்படுத்தி பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தின் கடன் மற்றும் லீசிங் தொடர்பான கொடுப்பனவுகளைச் செலுத்தல் போன்ற சேவைகள் பலவற்றை PLC Touch செயலி ஊடகப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், இதன் மூலம் ஆவணங்களுக்காக செலவிடும் காலத்தை மீதப்படுத்தி ஒரு சில வினாடிகளிலேயே புதிய காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும். “Call & Go” நடைமுறையின் கீழ் வாகனக் காப்புறுதி தொடர்பான உரிமைகோரல் செயற்பாடுகளும் இலகுபடுத்தப்படும்.

வங்கியில்லாத நிதி நிறுவனத் துறையின் முன்னோடி என்ற ரீதியில் நிலையான வைப்புக்கு எதிராக உடனடியான கடனை வாடிக்கையாளர்கள் ATM ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் Self-e-cash சேவையை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. QR மற்றும் பில் கொடுப்பனவு, நிதிப் பரிமாற்றம் மற்றும் ஏனைய தெரிவுகளை இணைப்பதன் ஊடாக PLC Touch செயலியின் மூலம் இந்த நடவடிக்கையை கண்காணிக்க முடியும்.

மிகவும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய இந்தச் செயலி புதிய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெறும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கையாகும். Google Play அல்லது App Store ஆகியவற்றில் PLC Touch ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

புதிய கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்க்ஷ குறிப்பிடுகையில், “நடைமுறையில் உள்ள செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்துவதற்கும் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது உற்சாகமாகவுள்ளது. முன்னோக்கிச் செல்வதற்கான வழி டிஜிட்டல் மயப்படுத்தலாகும். இது தொடர்பில் நாம் முன்னர் தெரிந்துகொண்டிருக்காவிட்டாலும் இனியாவது இது பற்றித் தெரிந்துகொள்வோம். கொவிட் தொற்றுநோய் சூழல் டிஜிட்டல் மயப்படுத்தலின் வரையறையற்ற வாய்ப்புக்கள் குறித்த எமது கண்களைத் திறந்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தமது சேவைகள் மற்றும் உற்பத்திகளை மீளுருவாக்கம் செய்ய மேலும் பல நிறுவனங்கள் முன்வர வேண்டும் என நான் ஊக்குவிக்கின்றேன்” என்றார்.

மக்கள் வங்கியுடன் இணைந்த நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனம், பிட்ச் சேரட்டிங் லங்கா லிமிடட் நிறுவனத்தினால்  ‘A+ (lka) outlook stable’ எனத் தரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிறுவனம் “இலங்கையில் உள்ள அதிசிறந்த 10 சிறப்பான பெருநிறுவனங்கள்” மத்தியில் ஒன்றாக கடந்த 7 வருடங்களாக விளங்கிவருகின்றது. இதனைவிடவும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனம் பெற்றுக் கொண்ட விருதுகளில் ‘Tranparency in Corporate Reporting’ (TRAC) மூன்றாவது இடம், Brands Finance Lanka நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ’Brands Annual’ இல் நிதிச் சேவைப் பிரிவில் மிகவும் பெறுமதிமிக்க நுகர்வோர் வர்த்தகநாமம் மற்றும்ää மிகவும் விரும்பப்படும் லீசிங் வர்த்தகநாமம் எனப் பெயர் பெற்றிருப்பதுடன், Business Today சஞ்சிகைக்கு அமைய உயர்ந்த 30 பெரு நிறுவனங்களில் 18வது இடத்திலும் இது காணப்படுகின்றது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப – குழுமத்தின் பிரதிப் பொது முகாமையாளர் – திரு. பிரபாத் குணசேன (நடுவே) அவர்களின் வழிகாட்டலின் கீழ் PLC Touch App ஐ உருவாக்கியுள்ள தகவல் தொழில்நுட்ப – குழுமத்தின் அணியினர்.
PLC Touch App கையடக்கத்தொலைபேசி செயலி