இஸ்லாமிய முதலீடுகள்

People's Leasing & Finance PLC: The Trusted Leader

இஸ்லாமிய முதலீடுகள்


சேமிப்புகள்

1.முதாரபாஹ் சேமிப்புக் கணக்கு – இச் சேமிப்புக் கணக்கு “முதாரபாஹ்” அடிப்படையில் செயற்படுகின்றது.

  • இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 45:55)
  • குறைந்தபட்ச வைப்பு ரூ.1,000/-
  • எந்தவொரு மக்கள் வங்கி டெலர் இயந்திரத்தில் இருந்தும் வீசாவுக்கு இணக்கமான எந்தவொரு டெலர் இயந்திரத்தில் இருந்தும் பண மீளப்பெறுதல்களைச் செய்ய உதவும் வீசா சர்வதேச பற்று அட்டை வழங்கப்படும்.
  • பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (உள்நாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
  • பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (வெளிநாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM). .
  • SMS விழிப்பூட்டல்கள்.
  • எந்தவொரு கிளையிலும் பண வைப்பு மற்றும் மீளப்பெறுதலைச் செய்யலாம்..
  • இலவச நிலையான கட்டளை வசதி.
  • ஒன்லைன் (Online) வங்கிச் சேவை வசதி.

2.உஸ்ஃபூர் சிறுவர் சேமிப்புக் கணக்கு – இது, சிறுவா்களுக்கான இலாபப் பகிர்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கணக்காகும். முதலீட்டின் மூலம் சம்பாதிக்கப்படும் இலாபத்தில் கூடுதலான பங்கை இது வழங்குகின்றது.

  • கணக்கை ஆரம்பிப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச முதலீடு ரூ. 250/-.
  • பிள்ளையின் சார்பில் பெற்றோர்/பாதுகாவலர் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
  • இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 47:53).

3.சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்கு -இச் சேமிப்புக் கணக்கு “முதாரபாஹ்” அடிப்படையில் செயற்படும்.

  • இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 50:50).
  • குறைந்தபட்ச வைப்பு ரூ.1,000/-
  • எந்தவொரு மக்கள் வங்கி டெலர் இயந்திரத்தில் இருந்தும் வீசாவுக்கு இணக்கமான எந்தவொரு டெலர் இயந்திரத்தில் இருந்தும் பண மீளப்பெறுதல்களைச் செய்ய உதவும் வீசா சர்வதேச பற்று அட்டை வழங்கப்படும்.
  • பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (உள்நாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
  • பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (வெளிநாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
  • SMS விழிப்பூட்டல்கள்.
  • எந்தவொரு கிளையிலும் பண வைப்பு மற்றும் மீளப்பெறுதலைச் செய்யலாம்..
  • இலவச நிலையான கட்டளை வசதி.
  • ஒன்லைன் (Online) வங்கிச் சேவை வசதி.

முதாரபாஹ் கால முதலீடு

  • இந்த முதலீட்டுச் சான்றிதழ் இலாபப் பகிர்வுக் கோட்பாடுகளின் அடிப்படையிலானது. இலாபம் முன்கூட்டியே இணங்கப்பட்ட விகிதத்திற்கேற்பப் பகிர்ந்துகொள்ளப்படும்.
  • 3, 6 மற்றும் 12 மாதங்களில் தொடங்கும் காலப்பகுதிகளுக்கேற்ப கவர்ச்சியான இலாபப் பங்கு வழங்கப்படும்.
  • பின்வரும் காலப்பகுதிகளைத் தெரிவு செய்யலாம்:
    03 மாதங்கள் – இலாபம் முதிர்ச்சியில்
    06 மாதங்கள் – இலாபம் முதிர்ச்சியில்
    12 மாதங்கள் – இலாபம் முதிர்ச்சியில்
    12 மாதங்கள் – இலாபம் மாதாந்தம்
    12 மாதங்கள் – இலாபம் காலாண்டுதோறும்

  • 12 மாத மாதாந்த மற்றும் 12 மாத முதிர்ச்சித் திட்டங்களுக்காக, சிரேஷ்ட பிரஜைகள் கால முதலீட்டுக் கணக்குகளுக்கு கூடுதலான இலாபப் பகிர்வு விகிதம் வழங்கப்படும்.
  • தகுதியுள்ள வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல் செய்யப்படும் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஒரு வைப்பாளருக்கு ஆகக்கூடியதாக ரூ.1,100,000/- என்ற அடிப்படையில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

வகாலா (கால அடிப்படையிலான முதலீடு)

  • ஒரு நபர் (முவக்கில்) ஷரிஆவுக்கு அமைவான வியாபாரத்தில் தான் முதலீடு செய்யும் பணத்தை நிர்வகிப்பதற்காக முகவர் (வக்கீல்) ஒருவரை நியமிக்கும் வகையில் செய்துகொள்ளும் ஒப்பந்தம் இதுவாகும்.
  • எதிர்பார்க்கப்படும் இலாப விகிதங்கள் 1 மாதம் முதல் 2,3,6,12,13,15,18,24 மாதங்கள் வரையான காலப்பகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
  • வாடிக்கையாளரின் தெரிவுக்கேற்ப இலாபம் முதிர்ச்சியில் அல்லது மாதாந்தம் வழங்கப்படும்.
  • தகுதியுள்ள வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல் செய்யப்படும் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஒரு வைப்பாளருக்கு ஆகக்கூடியதாக ரூ.1,100,000/- என்ற அடிப்படையில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

01.

Our Vision

To be legendary in the Islamic financial service scene as a provider of customer-friendly, creative and innovative total solution.

02.

Core Values

Economic viability, environmental responsibility and social accountability.

03.

Mission

Dedicated value added customer service to accomplish organisational service excellence whilst maintaining a sustainable competitive advantage.

Culture of the AIF Unit

Al-Safa Islamic Financial Services Unit of PLC is also has the same culture of the Company. Thus it always ensures the compliance with all rules and regulations prescribed to Islamic Business. Also customer centricity is a key visible aspect in everything undertaken by the AIF Unit. Unity in diversity is another key aspect that can be observed in the culture of the AIF Unit where they closely work with other employees.