சுற்றாடல் பொறுப்புடைமை


வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்களின் அதிகரிப்பானது பாரியளவில் காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு, வானிலை மாற்றங்கள், மிகவும் மோசமான ரீதியில் அனர்த்தங்கள் இவ்வானிலை மாற்றங்களினால் ஏற்படல், போன்றன புவி வெப்பமடைதலின் விளைவுகளாகும். பி. எல். சி ஆனது, சுற்றாடல் நிலைபேற்றினை உறுதிப்படுத்துவற்காக வேண்டி, தமது நடவடிக்கைகளை சுற்றாடலுக்கு உகந்ததாகவும், நிதியியல் நடவடிக்கைகளை சுற்றாடலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்ததாத வகையிலும் சுற்றாடலுக்கு ஏதுவான முறையிலும் மேற்கொள்ளல், என்பவற்றின் மூலமாக சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை இயன்றளவில் தவிர்த்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.


  • எமது வளையமைப்பினுள் பசுமையுணர்வை ஊக்குவித்தல்
  • கொள்முதல் செயற்பாட்டின்போது மிகவும் நுனுக்கமான முறையில் தனிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • மிகக்குறைந்தளவில் காபன் தடங்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் தாக்கங்களை குறைத்தல்.
  • எமது சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படல்.
  • நெறிமுறையான மற்றும் சமூக மற்றும் சுற்றாடல் ரீதியில் பொறுப்புடைமையுடன் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
  • பி. எல். சி யின் நிதியியல் செயற்பாடுகளில் மற்றும் சேவைகளில் சூழலைப் பாதுகாக்கும் வகையிலான பசுமைச் செயற்றிட்டங்களை மேற்கொள்ளல்.