பீப்பள்ஸ் லீசிங் 56ஆவது இலங்கை பட்டய கணக்காளர் வருடாந்த அறிக்கை விருதுகள் – 2021இல் மற்றுமொரு மதிப்புமிக்க விருதை வென்றுள்ளது


இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 56ஆவது பட்டய கணக்காளர் வருடாந்த அறிக்கை விருதுகளில், வங்கி அல்லாத நிதி நிறுவனத் துறையில் நிதி தீர்வுகளை வழங்குபவரான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் 2020/21 ஆண்டு அறிக்கை நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் (20 பில்லியன் ரூபாய்க்கு அதிக பெறுமதியான சொத்து) பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றுள்ளது. வருடாந்த அறிக்கை விருதுகள் போட்டியானது இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதோடு, இது பல்வேறு வணிகத் துறைகளில் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பழமையான கூட்டாண்மை நிகழ்வுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட நிகழ்வில் பெரு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் வரை அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் பெருமைக்குரிய இந்த அங்கீகாரத்தைப் பெற போட்டியிட்டனர்.

வருடாந்த அறிக்கைக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் பெறப்பட்ட தொடர்ச்சியான அங்கீகாரம், நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சமூகப் பொறுப்பை பராமரிப்பதில் நிறுவனத்தின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது. இந்த வருடத்திற்கான விருது, இந்தப் பகுதிகளில் அடையப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றுவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டிற்கு மேலும் சான்றாகும். 2020/21 வருடாந்த அறிக்கையானது பீப்பள்ஸ் லீசிங்கின் 8ஆவது ஒருங்கிணைந்த அறிக்கை என்பதோடு, இது “நன்றி Thanks” ia;+;shs என்ற கருப்பொருளில் அமைந்திருந்தது. இது நிறுவனத்தின் கடந்த 25 வருட பயணத்தில் உறுதியான ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும், நிறுவனத்தின் வளர்ச்சிகான படிக்கல்லாகவும் இருப்பவர்களுக்கும் நன்றி செலுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, வாடிக்கையாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத சலுகைகள் மற்றும் சவால்களை ஒன்றிணைத்து, மார்ச் 31, 2021இல் நிறைவடைந்த நிதியாண்டில் 5,596.33 மில்லியனுடன் குழும வரலாற்றில் அதிக இலாபத்தை பதிவு செய்தது. கொவிட்-19 பரவ ஆரம்பித்ததில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு பணத் தேவைகள் காணப்பட்டதோடு, பீப்பள்ஸ் லீசிங் அந்த சேவையை வழங்குவதற்காவே திறக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் முடக்க அறிவிப்புடன், பீப்பள்ஸ் லீசிங் முடியுமான வசதிகளை வழங்க ஆரம்பித்ததோடு, வாடிக்கையாளர்களுக்கு நன்மையை விரிவுபடுத்துதல் மற்றும் முடக்கக் காலத்திற்கு தகுதி பெறாதவர்களுக்கு அவர்களின் மீளச் செலுத்தும் திறன்களுக்கு ஏற்ப அவர்களின் வசதிகளை மீள்கட்டமைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலதிகமாக ஒன்பது மாத காலத்திற்கு இயல்புநிலை வட்டி தள்ளுபடி செய்யப்பட்டதோடு, இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகையை வழங்கியது.

“பீப்பள்ஸ் லீசிங்கின் வருடாந்த அறிக்கை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பலமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் நிதி நிலைத்தன்மை, நிறுவனத்தின் கட்டமைப்பு, நல்ல நிர்வாகம், கூட்டு சமூக பொறுப்பு முன்முயற்சிகள், மூலோபாய கவனம் மற்றும் எங்கள் நோக்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.” என பீப்பள்ஸ் லீசிங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின் தெரிவித்துள்ளார். “இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் அங்கீகாரம் பீப்பள்ஸ் லீசிங்கின் அறிக்கையிடல் மற்றும் தொடர்பாடல் திறன்கள் மற்றும் நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்கான அங்கீகாரமாகும்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீப்பள்ஸ் லீசிங் 1996ஆம் ஆண்டு இலங்கையின் மிகப் பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் பிரத்தியேகமான துணை நிறுவனமாக தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இன்று, இது கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு தொழில்துறையில் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா லிமிடெட் வழங்கும் “A+(Ika)” மதிப்பீட்டைக் கொண்டு, பீப்பள்ஸ் லீசிங், நாட்டிலேயே மிக உயர்ந்த தரமதிப்பீடு பெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். மேலும், பிஸ்னஸ் டுடேயின் டொப் 40 (2020-2021) சிறந்த செயல்திறன் நிறுவனங்களில் 27ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, பிராண்ட் பினான்ஸ் லங்காவினால் (2021) வகைப்படுத்தப்பட்ட நிதிச் சேவைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க நுகர்வோர் நாமம் மற்றும் குத்தகைத் துறையில் மிகவும் விரும்பப்படும் நாமமாகவும் இது பதிவாகியுள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் நிதிச் சேவை தயாரிப்பு பிரிவில் குத்தகை, வாகனக் கடன்கள், நிலையான வைப்பு, சேமிப்புக் கணக்குகள், வீட்டு மற்றும் வணிகக் கடன்கள், தங்கக் கடன்கள், வர்த்தகம் (Margin), காரணியாக்கம் (Factoring) மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் ஆகியவை அடங்கும். பீப்பள்ஸ் லீசிங் குழுமம் ஆறு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது – பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-கொமர்ஸ் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டெவலப்மென்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ப்ளீட் மெனேஜ்மென்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிடெட் மற்றும் அதன் வெளிநாட்டு முயற்சியான லங்கா அலையன்ஸ் ஃபினான்ஸ் லிமிடெட்.

பீப்பள்ஸ் லீசிங்கின் தனித்துவமான அம்சங்கள், பலவிதமான நிதித் தீர்வுகளை ஒரே கூரையின் கீழ் வழங்குவதற்கான வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை, தடையற்ற, வசதியான மற்றும் நட்புறவான வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்குகிறது.

“56ஆவது இலங்கை பட்டய கணக்காளர் வருடாந்த அறிக்கை விருதுகள் – 2021” நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் (20 பில்லியன் ரூபாய்க்கு அதிக பெறுமதியான சொத்து) துறையில் வெள்ளி விருது, பட்டய கணக்காளர் நிறுவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியினால், பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையளர், ஷமிந்த்ர மார்செலினுக்கு வழங்கப்பட்டது.

கொழும்பு பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி துலானி பெர்னாண்டோ, ரஜீவ பண்டாரநாயக்க மற்றும் வருடாந்த அறிக்கை விருதுகள் குழுவின் தலைவர் சமிந்த குமாரசிறி.

இடமிருந்து வலம்

ஷமிந்திர மார்செலின், துலானி பெர்னாண்டோ, ரஜீவ பண்டாரநாயக்க, சமிந்த குமாரசிறி.