சேருவில பிரதேச பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் போக்குவரத்து பேருந்தை வழங்கியது பீப்பள்ஸ் லீசிங்


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பீப்பள்ஸ் லீசிங்) நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாக 2022 செப்டெம்பர் 06 ஆம் திகதி சேருவில மங்கள ரஜ மகா விகாரையின் சமூக அபிவிருத்தி அறக்கட்டளைக்கு பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்றை வழங்கியது.

சேருவில மங்கள ரஜ மகா விகாரையின் விகாராதிபதியும், சேருவில சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் ஆதரவாளருமான அலுதெனியே சுபோதி தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவன முகாமையாளர் ஷமிந்திர மார்செலின் முன்னிலையில், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுஜீவ ராஜபக்ச பேருந்தை கையளித்தார். சேருவில மங்கள ரஜ மகா விகாரையின் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் சார்பாக அலுதேனியே சுபோதி தேரர் இதனை ஏற்றுக்கொண்டார்.

“சேருவில சுமேதங்கரபுர, கவுந்திஸ்ஸபுர, சீ பிரிவு, சேருநுவர, சோமாவதிய வீதி, மஹாவலிகம பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்லும்போது பல இன்னல்களை எதிர்நோக்குவதோடு, அடிக்கடி காட்டு யானை தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர்.” என அலுதேனியே சுபோதி தேரர் தெரிவித்துள்ளார். பீப்பிள்ஸ் லீசிங்கின் முன்னாள் தலைவர் சுஜீவ ராஜபக்ச, பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின் மற்றும் கூட்டுத்தாபன முகாமைத்துவம் ஆகியோருக்கு தேரர் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்தார்.

“எங்கள் சமூக பொறுப்புணர்வு முயற்சிகளில் ஒன்றாக இந்த தகுதியான நோக்கத்திற்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் பாடசாலைப் பிள்ளைகள் தொடர்ந்து பாடசாலைக்குச் செல்வதற்கும், நன்றாகப் கல்வி கற்பதற்கும் மாத்திரமன்றி தங்களுடைய இளைய சகோதர சகோதரிகளும் பயன்பெறும் வகையில்  இந்த போக்குவரத்து வசதியை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என நாம் நம்புகின்றோம்.” என சுஜீவ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அதலுவகே, கந்தளாய் கல்வி வலயத்தின் வலய பணிப்பாளர் தர்மதிலக, சமூக அபிவிருத்தி அறக்கட்டளை உறுப்பினர்கள், சேருவில மங்கள மகா சைத்திய வர்தன சங்க உறுப்பினர்கள், சேருவில மங்கள ரஜ மகா விகாரையின் பக்தர்கள் மற்றும் அதிபர் மற்றும் சேருவில மகா வித்தியாலய மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர். பீப்பள்ஸ் லீசிங்கினால் மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள் மற்றும் எழுது கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பீப்பள்ஸ் லீசிங் என்பது இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும். 1996 ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த பீப்பள்ஸ் லீசிங், 2011 ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங்கின் முன்னாள் தலைவர் சுஜீவ ராஜபக்ச, பீப்பள்ஸ் லீசிங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் நிறுவன முகாமையாளர் ஷமிந்திர மார்செலின் முன்னிலையில் பயணிகள் போக்குவரத்து பேருந்தை அலுதேனியே சுபோதி தேரரிடம் கையளித்தார். சேருவில மகா வித்தியாலய மாணவர்களையும் படத்தில் காணலாம்.